விற்பனைகாரிமங்கலம், ஆக.12: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
நேற்று நடந்த சந்தையில் சுமார் 750 ஆடுகள், 600 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், ரூ.95 லட்சத்திற்கு ஆடுகளும், ரூ.80 லட்சத்திற்கு மாடுகளும், ரூ.5 லட்சத்திற்கு நாட்டுக்கோழிகளும் விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில் ரூ.1.80 கோடிக்கு கால்நடை வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடை வரத்து மற்றும் விற்பனை குறைந்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.



