தர்மபுரி, ஆக.12: தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அடுத்த புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்தி மகள் சவுந்தர்யா(18). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து பெற்றோர் பெரும்பாலை போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
+
Advertisement



