அரூர், டிச.9: கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சேர்ந்த 6 பக்தர்கள் அடங்கிய குழுவினர், ஆந்திரா மாநிலம் திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்து விட்டு, அங்கு இருந்து இருமுடியை சுமந்தவாறு சபரிமலைக்கு நடைபயணமாக செல்கின்றனர். திருப்பதியில் கடந்த 30ம் தேதி பயணம் துவங்கிய அவர்கள் 22.12.2025 ம் தேதி சபரிமலை தரிசனம் செய்கின்றனர். திருப்பதியில் 749 கிமீ தூரத்தை அவர்கள் நடைபயணமாக செல்ல உள்ளனர். ஆந்திராவிலிருந்து வேலூர், திருப்பத்தூர், அரூர், சேலம் வழியாக சபரிமலை செல்ல உள்ளனர். அரூர் வழியாக வந்த அவர்களை ஐயப்ப பக்தர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
+
Advertisement


