Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆங்கில துறையில் சிறப்பு கருத்தரங்கு

தர்மபுரி, ஜன.10: தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கில துறையில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மதுரை தியாகராஜர் கல்லூரி ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், இலக்கிய புத்தகங்களை நாம் எவ்வாறு தியரி அடிப்படையில் அணுகலாம் என்பதை பற்றியும், போஸ்ட் சக்சரலிசம் மற்றும் டிகன்ஸ்ட்ரக்ஷன் ஆகியவற்றின் தோற்றம் வளர்ச்சி மற்றும் இவைகளை இலக்கிய நூல்களில் பொருத்தி பார்த்தல் பற்றி எடுத்துரைத்தார். மேலும் மாணவர் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார். முன்னதாக ஆராய்ச்சி மைய இயக்குனர்(பொ) செல்வபாண்டியன் தலைமை உரையாற்றினார். தொடர்ந்து இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் ஆங்கிலத் துறை தலைவர் கோவிந்தராஜ் நிகழ்வுக்கான துவக்க உரையாற்றினார். உதவி பேராசிரியை கிருத்திகா வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக இரண்டாம் ஆண்டு மாணவி பிரபாவதி வரவேற்றார். மாணவர் புகழேந்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். முதலாம் ஆண்டு மாணவி நிவேதா நன்றி கூறினார். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கவுரவ விரிவுரையாளர்கள் சரண்யா மீனா மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் செய்திருந்தனர்.