Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சரக்கு வாகனம் மோதி விவசாயி பலி

அரூர், பிப்.5: அரூர் அடுத்த எச்.தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன்(65), விவசாயி. இவர் கடந்த திங்கட்கிழமை மாலை, தனது டூவீலரில் அரூர் அடுத்த எச்.தொட்டம்பட்டி பிரிவு ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வேகமாக வந்த சரக்கு வாகனம், டூவீலர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குணசேகரன் படுகாயமடைந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.