Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடன் தொல்லையால் மேஸ்திரி தற்கொலை

தர்மபுரி, பிப்.5: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு காவாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்(28). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி தாமரைச்செல்வி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மாதேஷிற்கு கடன் தொல்லை இருந்துள்ளது. அதற்கு வட்டி கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்தார். இதையடுத்து தாமரைச்செல்வி, தனது நகைகளை அடமானம் வைத்து, கடனை கட்டி விடலாம் என கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு மாதேஷ் மறுப்பு தெரிவித்து விட்டார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை வீட்டில் இருந்த மாதேஷ், திடீரென விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், மாதேசை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதுபற்றி பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.