Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மாயமான மூதாட்டி கிணற்றில் சடலமாக மீட்பு

தர்மபுரி, பிப்.5: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி நீலாஞ்சானூர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா(61). கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் வசந்தா சடலமாக மிதப்பதாக, நேற்று முன்தினம் அவ்வழியாக சென்றவர்கள் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்துக்கு ெசன்ற பாலக்கோடு தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், கிணற்றில் மிதந்த வசந்தாவின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர், அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.