Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இண்டூர் அருகே சூதாடிய 4 பேர் கைது

பாப்பாரப்பட்டி, ஜன.5: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே பண்டஅள்ளி கிராமத்தில், ஏரிக்கரை பகுதியில் காசு வைத்து சூதாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், பாப்பாரப்பட்டி எஸ்ஐ யோகராஜ் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று சூதாட்ட கும்பலை சுற்றி வளைத்தனர்.

போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களில் பண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(32), பக்கு(55), ராமர்கூடல் கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜ்(32) பங்கு நத்தம் சரவணன்(49) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2250 மற்றும் சீட்டுக்கட்டுக்களை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.