Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி முகாம்

கடத்தூர், பிப்.3: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், தர்மபுரி மாவட்டத்தில் திருக்குறள் திருப்பணிகள் திட்டம் - முப்பால் பயிற்றுநர் மன்றம் சார்பில் “நிகழ்ச்சி என்ற தலைப்பில் பயிற்சி முகாம் கேத்துரெட்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் நடராஜ், உதவி தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக திருக்குறள் திருப்பணிகள் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் வட்டார பொறுப்பாளர் பாவலர் மலர்வண்ணன், திருக்குறள் பயிற்சி முனைவர் ஈசுவரன், கவிஞர் மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு திருக்குறளின் சிறப்புகள், அதன் ஒழுக்க நெறிகள் மற்றும் வாழ்வியல் பயன்கள் குறித்து விவரித்தனர்.

திருக்குறள் மனித வாழ்வில் ஒழுக்கம், அறம், இன்பம், பொருள் ஆகிய நான்கு நிலைகளிலும் வழிகாட்டியாக அமைந்துள்ளது. மாணவர்கள் திருக்குறளை தங்களின் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினர். திருக்குறள் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். தமிழாசிரியர் சௌந்தரி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் திருக்குறள் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.