தர்மபுரி, டிச.3: தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் எச்ஐவி - எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில், சுகாதாரத்துறை மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில், மாணவ, மாணவிகளுக்கான எச்ஐவி, எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை வகித்து பேசுகையில், ‘மாணவ, மாணவிகள் இளம் வயதில் திருமணம் செய்யக்கூடாது. குறிப்பாக மாணவிகள் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும்,’ என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ராஜேந்திரன், மாவட்ட மேற்பார்வையாளர் உலகநாதன், ஆலோசகர் பாலமுருகன், மையமேலாளர் பேபி, சக ஆலோசகர் தனபாக்கியம், இணைப்பேராசிரியர் ராஜன், இணை பேராசிரியர் சந்திரசேகரன் மற்றும் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement

