தர்மபுரி, டிச.3: பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் (ஆர்.ஓ.பிளாண்ட்) சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது. இதில் கோவிந்தசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் நல்லத்தம்பி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் தமிழ்மணி, பேரூர் செயலாளர் தென்னரசு, சந்தோஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் ரவி, ராஜேந்திரன், தொல்காப்பியன், சக்திவேல், சிலம்பரசன், மாதையன், ரமேஷ், மணி, அன்பு, பொன்னன், இளவரசன், சீனு, ரவீந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement

