தர்மபுரி, டிச.3: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே நாகலாபுரம் பகுதியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவை முன்னிட்டு ஆடல், பாடல்களுடன் கூடிய கலைநிகழ்ச்சிக்கு, சில இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நேற்று முன்தினம், அப்பகுதியில் இண்டூர் போலீஸ் எஸ்ஐ மூர்த்தி ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது, அங்கு ஆபாச நடனங்கள் அரங்கேற்றப்பட்டது. இதுகுறித்து, எஸ்ஐ மூர்த்தி அளித்த புகாரின் பேரில், ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அதே பகுதியை சேர்ந்த நவீன்குமார்(28), முருகன், மாதையன், முத்துராஜ், வெங்கடாசலபதி ஆகிய 5 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement

