பாலக்கோடு, அக்.2: பாலக்கோடு அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 44 குழந்தைகளுக்கு, தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் மருத்துவர் கார்த்திக் தலைமையில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு முன்னிலை வகித்தார். 44 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் முத்தழகு, ஒன்றிய செயலாளர்கள் குமார், கிருஷ்ணன், நகர செயலாளர் விக்னேஷ், கிளை செயலாளர்கள் நவீத், சுகுமார், முரளி, அரவிந்த், கார்த்திக், பாபா ஜான், ஜீசான், சிலம்பரசன், லோகநாதன், சபரி, பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


