கடத்தூர், அக்.2: கடத்தூர் ஒன்றியம், கேத்துரெட்டிப்பட்டி ஊராட்சி பெரிய ஏரிக்கரையில், ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, ஊராட்சி செயலாளர் முகிலன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ரகு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, பெரிய ஏரிக்கரையில் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
கடத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தும் வகையில், சமூக பணியில் ஆர்வமுள்ளவர்கள் ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி, பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகளை நடவு செய்து முறையாக பராமரிக்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.


