Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

23 மூட்டை பருத்தி ரூ.1.24 லட்சத்துக்கு ஏலம்

தர்மபுரி, ஜூலை 9: தர்மபுரி வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது.  இந்த ஏலத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் 23 மூட்டை கொண்ட 1,365 கிலோ பருத்தி விற்பனை செய்யப்பட்டது. ஏலத்தில் டிசிஎச் பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக ரூ.9,123க்கு விற்பனையானது. மொத்தமாக ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 529க்கு பருத்தி விற்பனையானது. தர்மபுரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பிரதிவாரம் திங்கட்கிழமை தோறும் மஞ்சள், பருத்தி மற்றும் புளி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏல மையத்தில் எவ்வித கமிஷனும் இன்றி விற்பனை நடைபெறுவதால், விவசாயிகள் ஏலத்தில் கலந்துகொண்டு பயனடையுமாறு விற்பனை கூட கண்காணிப்பாளர் முரளிதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.