Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பாப்பிரெட்டிப்பட்டியில் பூட்டிய வீட்டிற்குள் தொழிலாளி சடலம் மீட்பு

தர்மபுரி, ஜூலை 31: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மாயாபஜார் தெருவை சேர்ந்தவர் வடிவேலன் (44). கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால், தாயாருடன் வடிவேலன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், உறவினர் வீட்டுக்கு சென்ற வடிவேலனின் தாயார் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் வடிவேலன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வீட்டிற்குள் சென்று பார்த்த போது வடிவேலன் சடலமாக கிடந்தார். சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.