Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குடியிருப்பு பகுதியில் விதிமீறி செயல்படும் டாஸ்மாக் கடை

காரிமங்கலம், ஜூலை 30: காரிமங்கலம் அருகே கல்வி நிறுவனங்கள், குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் விதிமீறி செயல்படும் டாஸ்மாக் கடையில் மதுவாங்கும் குடிமகன்கள், திறந்த வெளியில் மது அருந்துவதால் மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் அச்சமடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி மெயின்ரோட்டில் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு, வணிக நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளது. இந்த ரோட்டில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருகிறது. எப்பொழுதும் பரபரப்பாக உள்ள இந்த ரோட்டில், கல்வி நிறுவனங்களுக்கு மிக அருகாமையிலும், பொதுமக்கள் குடியிருப்பு பகுதியிலும், விதிமீறி டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.

பகல் 12 மணியளவில் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு, கடை வளாகத்திலேயே அமர்ந்து ஹாயாக மது அருந்தி வருகின்றனர். மேலும், மெயின்ரோட்டில் உள்ள பல்வேறு கடைகளும் அறிவிக்கப்படாத பாராக மாறி விட்டது. கடைகளில் சுற்றியுள்ள பகுதியில் பச்சை துணி மூடப்பட்டு, சட்ட விரோத பார் அதிகாரிகள், போலீசார் ஆசியுடன் ஜரூராக நடந்து வருகிறது. மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை, குடிமகன்கள் வசத்தில் சிக்கிக்கொண்டு பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். குடிபோதையில் டூவீலரில் செல்லும் குடிமகன்கள், ரோட்டில் நடந்து செல்லும் மக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகின்றனர். எனவே, விதிமீறி இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.