Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கூடுதல் கட்டணம் வசூலித்ததால் ஆதார் சேவை மையம் முடக்கம் கலெக்டர் சரவணன் நடவடிக்கை

தர்மபுரி, ஜூலை 29: தர்மபுரியில், இந்தியன் வங்கி பிரதான கிளை ஆதார் சேவை மையத்தில், கூடுதல் கட்டணம் வசூலித்தற்காக முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியன் வங்கி பிரதான கிளையில் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையத்தில், மாவட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தனி தாசில்தாரால் கடந்த 24ம்தேதி ஆய்வு மேற்கொண்டதில், இலவசமாக புதிய ஆதார் பதிவு செய்வதற்கு பதிலாக ரூ.150 பெறுவதும், ஆதாரில் மாற்றம், திருத்தம் செய்ய ரூ.75க்கு பதிலாக ரூ.100 கூடுதாலகவும், கைரேகை, கருவிழி பதிவு செய்ய ரூ.125க்கு பதிலாக ரூ.250 கூடுதலாக பெறுவதும் கண்டறியப்பட்டது. இது யூஐடிஏஐ நிர்ணயம் செய்த கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் பெற்றதால், அந்த ஆதார் சேவை மைய தரவு உள்ளிட்டாளரின் ஆதார் ஐடி, 24ம்தேதி முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி பிரதான கிளை ஆதார் சேவை மையம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.