Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கதிரிபுரம் வனப்பகுதிகளில் வறட்சி: குரங்குகள் விபத்தில் உயிரிழக்கும் அபாயம்; தடுக்க வலியுறுத்தல்

அரூர், ஜூன் 29: தர்மபுரி மாவட்டத்தில், அனைத்து பகுதிகளும் போதிய மழையின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் எங்கும் வறட்சி தாண்டவமாடுகிறது. இதற்கு குரங்குகளும் தப்பவில்லை. வனப்பகுதிகளில் வறட்சி காரணமாக, உணவு ஏதும் கிடைக்காத குரங்குகள் சாலையோரம் வந்து காத்திருக்கிறது. பொம்மிடியிலிருந்து அரூர் வரும் வழியில், கதிரிபுரம் என்ற இடத்தில் பயணிகள் உணவு ஏதேனும் போட்டு செல்வார்களா என குரங்குகள் காத்திருக்கிறது. அவ்வாறு காத்திருக்கும் குரங்குகள் பயணிகள் வீசும் உணவை கைப்பற்ற விரைந்து வரும் போது, வாகனங்களில் அடிப்பட்டு இறக்கும் நிலை உள்ளது. எனவே, வனப்பகுதிகளில் உள்ள குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளுக்கு, உணவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.