Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பாலக்கோடு அருகே லோடு ஏற்றிச்சென்ற லாரி டிரைவர் சாவு

தர்மபுரி, ஜூலை 28: கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பின்(53). லாரி டிரைவரான இவர், பெங்களூருவில் உள்ள பிளாஸ்டிக் நிறுவனத்தில், லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு லோடு ஏற்றிச்சென்றார். பாலக்கோடு- தர்மபுரி விரைவு நெடுஞ்சாலை புதிய டோல்கேட் அருகில், நேற்று முன்தினம் லாரியை நிறுத்தி விட்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.

பின்னர், லாரிக்கு திரும்பிய அவர் அமர்ந்த நிலையில் இருந்துள்ளார். நீண்ட நேரமாக லாரி எடுக்காததால், டோல்கேட் ஊழியர்கள் சென்று பார்த்த போது, ஆல்பின் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுபற்றி லாரி உரிமையாளர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், பாலக்கோடு போலீசார் வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.