Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆசிரியர்கள் சுய கணக்கெடுப்பு: விவரங்களை பதிவு செய்ய வேண்டும்

தர்மபுரி, ஜூலை 27: தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும், தங்களுடைய கணக்கெடுப்பில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு மாநிலத்திலும் வீடுகள், வீட்டில் உள்ள வசதிகள் குறித்த கணக்கெடுப்பு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது. முதல் முறையாக டிஜிட்டல் முறையில் நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான சுய விவரங்கள் பதிவு, கடந்த 17ம்தேதி முதல் தொடங்கியது. வரும் 31ம் தேதி வரை சுய கணக்கெடுப்பு விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான சுய விவரங்களை இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சுய விவரங்களை இணையதளம் மூலம் பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் 833 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், 321 நடுநிலைப்பள்ளிகள், 118 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 109 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,381 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 9 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பையொட்டி நடக்கும் சுயவிவர கணக்கெடுப்பில், இவர்கள் அனைவரும் தங்கள் விவரங்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஆசிரியர்கள் இணையதளம் மூலம், தங்கள் சுய விவரங்களை பதிவு செய்து வருகின்றனர். இவர்களில் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், இந்த பணியை முடித்து விட்டனர். வரும் 30ம்தேதிக்குள் அனைத்து ஆசிரியர்களும் இந்த பணியை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த கட்டமாக வீடுகளுக்கு கணக்கெடுப்பாளர்கள் வரும் போது ஏற்கனவே சுய விபர பதிவில் தரப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் கணக்கெடுப்பு பணியை விரைவாக மேற்கொள்ள முடியும். இதனால் காலதாமதம் தவிர்க்கப்படும். இவ்வாறு அவர்கள்

தெரிவித்தனர்.