தர்மபுரி, ஜூன் 26: தர்மபுரியில் அரிவாளுடன் நடுரோட்டில் தள்ளாடிய போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மதிகோண்பாளையத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழாவையொட்டி, கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற வாலிபர் ஒருவர், குடிபோதையில் சாலையின் நடுவில் நின்று, கையில் அரிவாளை சுழற்றிக் கொண்டு நடனமாடிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதையடுத்து தர்மபுரி டவுன் எஸ்ஐ சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில், போதையில் அரிவாளுடன் ஆடியவர் தர்மபுரி காமாட்சியம்மன் தெருவை சேர்ந்த முனியப்பன்(36) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து
வருகின்றனர்.
