Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தர்மபுரியில் உறுப்புதான விழிப்புணர்வு ஊர்வலம்

தர்மபுரி, ஜூலை 24: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில், உடற்கூறியல் துறை சார்பில் தன்னார்வ உடல் உறுப்பு தான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மனோகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணை முதல்வர் சாந்தி, மருத்துவ துறை கண்காணிப்பாளர் சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் நாகவேந்தன், மருத்துவ துறை அதிகாரிகள், சந்திரசேகர், துணைத்தலைவர் பிரபாவதி கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தில் உடல் தான பதிவு, மரணத்திற்கு பின் உடல் தானம் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளுடன் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் உடல் தானம் வழங்கியவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள், உடல் தானம் செய்ய பதிவு செய்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து உடல் தானத்திற்கு பதிவு செய்ய, விண்ணப்பங்களை நவீன தொழில்நுட்ப முறையில் பெறும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது.