பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 24: பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி அருகே ராம்தாஸ் நகரை சேர்ந்தவர் சதீஷ்(40), விவசாயி. இவருக்கும் இவரது பெரியப்பா மற்றும் சித்தப்பா ஆகியோர் மூவருக்கும், பொது கிணறு உள்ளது. இந்த கிணற்றில் மண் சரிந்து பைப் கிணற்றில் விழுந்து விட்டது. இதனால் தண்ணீர் எடுத்து விட முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, கடந்த 7ம் தேதி சதீஷ் கிணற்றில் இறங்கி பைப்பை எடுத்துள்ளார். இதனை பார்த்த பெரியப்பா மகன் கார்த்திக்(23), சித்தப்பா மகன் அருள்(26) இருவரும், எங்களை கேட்காமல் ஏன் பைப்பை எடுத்தாய் என்று கூறி தகாத வார்த்தையில் திட்டி, அருகில் இருந்த செங்கல் மற்றும் கையால் சதீசை அடித்துள்ளனர். இதில் பலத்த தாயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த பொம்மிடி போலீசார் கார்த்திக், அருள் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர், பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அரூர் கிளை சிறையில் அடைத்தனர்.
+
Advertisement



