Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிராக்டரில் டூவீலர் மோதி சமையல் மாஸ்டர் பலி

பாப்பாரப்பட்டி, ஜூன் 24:பாலக்கோடு டவுன் புது பட்டாணியர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன்(55), சமையல் மாஸ்டர். இவர் நேற்று முன்தினம் பாப்பாரப்பட்டியில் சமையல் ஆர்டர் எடுத்துக்கொண்டு பாலக்கோடுக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தொட்டிலாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் டிராக்டர் பின்னால் இருந்த கலப்பையில் மோதி பலத்த காயமடைந்த பாண்டியன் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பாண்டியன் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மதியம் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியன் இறந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.