தர்மபுரி, ஜூன் 22: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் பார்த்திபன் (28). இவர் தர்மபுரி மாவட்டம், பெரியாம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம், அதே பகுதியில் உள்ள ஓட்டல் முன் தனது பைக்கை நிறுத்தி விட்டு, சாப்பிடச் சென்றார். பின்னர், வெளியே வந்து பார்த்த போது, பைக் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement
