பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 21: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி தற்போது செயல்படாமல் பூட்டப்பட்டு கிடக்கிறது. நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் பூட்டப்பட்டு உள்ள கல்லூரிக்குள் சென்று இரண்டு கம்பரசர் மோட்டார்கள் மற்றும் இரும்பு பொருட்களை திருடி சென்று விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கல்லூரி உரிமையாளர் ராமச்சந்திரன், பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் பாதுகாப்புக்காக பொருத்துப்பட்டு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்குள் புகுந்து 2 கம்ப்ரசர் மற்றும் இரும்பு பொருட்கள் திருடியது, பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரை சேர்ந்த சுப்பிரமணி மகன் லோகநாதன்(25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் கல்லூரியில் பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டார். திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.25 ஆயிரம் ஆகும். இதையடுத்து லோகநாதனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 கம்ப்ரசர் மற்றும் இரும்பு பொருட்களை பறிமுதல் செய்தனர்.



