Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சுதந்திர போராட்ட வீரர் விஸ்வநாத தாஸ் பிறந்தநாள் விழா

காரிமங்கலம், ஜூன் 19: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் இந்திய விடுதலைக்காக 29 முறை சிறை சென்ற சுதந்திர போராட்ட வீரர் தியாகி விஸ்வநாத தாஸின் 140வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மணிவண்ணன் தலைமை வகித்து, தியாகி விஸ்வநாததாஸ் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் மாரியப்பன், விடுதலை போராட்டத்தில் தியாகி விஸ்வநாத தாஸ் பங்கு குறித்து பேசினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் 145வது டிவிஷன் பூங்காவிற்கு தியாகி விஸ்வநாத தாஸ் பெயர் சூட்டியமைக்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராமசாமி, மோகன், மணிவண்ணன், கோவிந்தராஜ், காந்தி லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.