Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சூதாடிய 4 பேர் கைது ரூ.6,000, 7 டூவீலர் பறிமுதல்

தர்மபுரி, மே 19: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் எஸ்ஐ கோகுல் மற்றும் போலீசார், ஒடசல்பட்டி ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்தனர். அதில், 4 பேர் போலீசாரின் பிடியில் சிக்கினர். மேலும் 3 பேர் தப்பியோடி விட்டனர். சிக்கியவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர்(45), சங்கர்(39), அருள்(45), கோவிந்தராஜன்(43) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அங்கிருந்த 7 டூவீலர்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தப்பி ஓடிய 3 பேர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.