Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தர்மபுரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தர்மபுரி, ஆக.18: தர்மபுரியில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22ம் தேதி நடைபெறுவதையொட்டி விழிப்புணர்வு பிரசார வாகனங்களை கலெக்டர் தொடங்கி வைத்தார்.தர்மபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக - நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22ம் தேதி தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நடக்கிறது. இதையொட்டி, பொதுமக்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, விழிப்புணர்வு வாகனங்களை கலெக்டர் சரவணன், கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், `வேலைவாய்ப்பு முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கிசேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யப்பட உள்ளது. மேலும், இம்முகாமில் பொதுமக்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது,’ என்றார்.  நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் முத்துக்குமாரசாமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்(பொ) கவுரிசங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.