Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரயில்வே பாலத்தின் அடியில் தேங்கும் மழைநீரால் அவதி

அரூர், ஜூன் 18: தர்மபுரி மாவட்டம் மொரப்பூர், தாசிரஅள்ளி வழியாக சிந்தல்பாடி செல்லும் பாதையில் ரயில்வே பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் செல்லும் வழியை சிந்தல்பாடி, ராமியம்பட்டி, தென்கரைகோட்டை, தொங்கனூர், வகுத்தப்பட்டி, கடத்தூர், அரூர் உள்பட பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.  மேலும் பஸ்கள், டூவீலர், சரக்கு வாகனங்களும் சென்று வருகிறது. இந்நிலையில் சிறிதளவு மழை பெய்தாலும் ரயில்வே பாலத்தின் அடியில் குளம் போல் தண்ணீர் தேங்குவதால், அந்த வழியாக செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே பாலத்தின் அடியில் மழை நீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.