தர்மபுரி, ஜூன் 18: தர்மபுரி மேற்கு மாவட்ட தவெக அலுவலகத்தில் நேற்று, மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடந்தது. பைசுஅள்ளி ஊராட்சி குண்டலஅள்ளி பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ராஜா மற்றும் பலர் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். இதேபோல் நேற்று முன்தினம் திரிணாமுல் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ், தர்மபுரி ஒன்றிய செயலாளர் மாதேஷ், மகளிரணி தலைவி லாவண்யா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மாற்றுக்கட்சியினர் என மொத்தம் 150 பேர், மாநில நிர்வாக குழு உறுப்பினரும், தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான தாபா சிவன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
+
Advertisement
