பாப்பிரெட்டிப்பட்டி, ஆக.17: பொம்மிடி ரயில் நிலையத்தில் மிகவும் தாழ்வாக பிளாட்பார்ம் அமைந்துள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடியில் 100 ஆண்டு கால பழமையான ரயில் நிலையம் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுப்பித்து புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. பொம்மிடியை சுற்றி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் சேலம், கேரளா, சென்னை மற்றும் பல்வேறு வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்று வருகிறார்கள். இந்த ரயில் நிலையத்தில் அமைந்துள்ள பிளாட்பாரம் மிகவும் தாழ்வாக ரயிலில் ஏற முடியாத அளவிற்கு காணப்படுகிறது.
+
Advertisement



