Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருமணம் செய்து சிறுமிகளை கர்ப்பமாக்கிய 2 வாலிபர்கள்

தர்மபுரி, ஆக.17: அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியில் காதல் திருமணம் செய்த சிறுமிகள் கர்ப்பமடைந்தது தொடர்பாக 2 வாலிபர்கள் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.தர்மபுரி மாவட்டம், அரூர் தோள்தூக்கி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, உண்டு- உறைவிட பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். வீட்டில் இருந்த சிறுமியிடம், உறவினரான மோகன்ராஜ்(22) என்ற கூலி தொழிலாளி பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் காதலாக மாறியது. பெற்றோர் கண்டித்து, சிறுமிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனால், கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து வீட்டுக்கு வந்த அவர்களை பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்ட சிறுமி சித்தேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு, பரிசோதனை செய்த போது 7 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர், அரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதன்பேரில், போலீசார் விசாரித்து கணவன் மோகன்ராஜ், உறவினர் அண்ணாமலை, செல்லம்மாள் ஆகியோர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.