Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பென்னாகரம் அருகே கஞ்சா விற்றவர் கைது

பென்னாகரம், ஜூலை 17: பென்னாகரம் அருகே, நாகனூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பென்னாகரம் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நாகனூர் கிராமத்தை சேர்ந்த சேகர்(50) என்பவர் கஞ்சா விற்பனை செய்வதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை பிடித்து சோதனை செய்ததில், ரூ.2 ஆயிரம் மதிப்பிலான 200 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து, சேகரை போலீசார் கைது செய்து, பென்னாகரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி சிறையில் அடைத்தனர்.