தர்மபுரி, ஜூலை 17: தமிழகம் முழுவதும் 4 நாட்களுக்கு வெயில் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை காலம் போல் வெயில் நிலவி வருகிறது. கடந்த ஒரு மாதமாக 90 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் நிலவி வந்த வெயில், கடந்த 4 நாட்களாக வெயில் அதிரிக்க தொங்கியது. நேற்று முன்தினம் 97.1 டிகிரியாகவும், நேற்று 98.9 டிகிரியாகவும் அதிகரித்தது. சாலைகளில் கானல் நீர் தென்படுவதால், அனல் காற்று வீசுகிறது. இரவிலும் வெப்பம் காரணமாக மக்கள் தூங்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். கடந்த ஒரு வாரமாக காற்றின் வேகமும் குறைவாக இருப்பதால் அனல் தகிக்கிறது. பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது.
+
Advertisement




