Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தர்மபுரி, ஜூலை 15: ஆனி மாத அமாவாசையையொட்டி, தர்மபுரி எஸ்.வி,ரோடு ஸ்ரீ அபய ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடந்தது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி ஹரிஹர நாத சுவாமி கோயில் தெருவில் உள்ள தாஸ ஆஞ்சநேயர் சிறப்பு வழிபாடு நடந்தது. வே.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேய சுவாமி கோயில், தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோயிலிலும் சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

மேலும் ஆனி செவ்வாய்கிழமையை முன்னிட்டு, குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைடர்ந்து சிவசுப்பிரமணியசுவாமி வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அருகே சோம்பட்டி சஞ்சீவபுரத்தில் வீர வீர ஆஞ்சநேயர் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆஞ்சநேயருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் வெற்றிலை, துளசி, வடை மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.