Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

துணை சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு விழா

பாப்பாரப்பட்டி, ஜூலை 15: பாப்பாரப்பட்டி அடுத்த வேப்பிலை கிராமத்தில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, அரசு துணை சுகாதார நிலைய புதிய கட்டிடத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ராமதாஸ், பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சக்திவேல், கீதா, லட்சுமி, சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர், கிராம சுகாதார செவிலியர்கள் சுப்புலட்சுமி, சுபத்ரா, சக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.