தர்மபுரி, ஜூன் 15: தர்மபுரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ள நீச்சல் குளத்தில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்கள் நடந்து வந்தன. அந்த வகையில், 5ம் கட்ட நீச்சல் பயிற்சி, கடந்த 5ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ்களும், டீ சர்ட்டுகளும் வழங்கப்பட்டன. இதுவரை ஐந்து கட்ட நீச்சல் பயிற்சி முகாம்களில் 326 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் என தர்மபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்தார்.
+
Advertisement


