Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொப்பூர் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

தர்மபுரி, மே 15: தர்மபுரி மாவட்டம் தொப்பூர் ரயில் நிலையம் - காருவள்ளி ரயில் நிலையம் இடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இறந்தவர் யார், எந்த ஊர் என தெரியவில்லை. பொதுமக்கள் மூலம் தர்மபுரி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரயில்வே போலீஸ் எஸ்எஸ்ஐ சிதம்பரம் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தை கடந்த போது, ரயில் மோதியதில் இறந்தது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.