Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.14 லட்சம் நல உதவிகள் கலெக்டர் வழங்கினார்

தர்மபுரி, ஜூலை 14: தர்மபுரியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ரூ.13.73 லட்சத்தில் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.தர்மபுரி கலெக்டர் அலுவலக அதியன் கூட்டரங்கில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரவணன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ்வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர்மாற்றம், புதிய குடும்ப சான்றிதழ், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியத் தொகை, இலவச வீட்டுமனை பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 607 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.

அம்மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வினை வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13.73 லட்சம் மதிப்பீட்டில் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதைத்தொடர்ந்து, வருவாய் துறை சார்பில் 2 பேருக்கு ஓய்வூதியத்திற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, தனித்துணை கலெக்டர் ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பண்டரிநாதன் உள்ளிட்ட தொடர்புடைய அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.