Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்: கலெக்டரிடம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மனு

தர்மபுரி, ஜூலை 14: முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை, மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக்கு சில ஒன்றியங்களில் ஆணை வழங்கப்பட்டுள்ளதில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில், முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா மற்றும் மாவட்ட கலெக்டர் சரவணன் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மேல்நிலை அரசு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவ்வாறு அவர்களை ஈடுபடுத்துவதால், கற்றல் கற்பித்தல் பணி பாதிக்கப்படும்.

மேலும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறையும் சூழல் உள்ளது. இதனால் மாணவர் நலன் கருதி இப்பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு கலெக்டர் சரவணன் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது, மாவட்ட தலைவர் ஆறுமுகம், மாநில துணைத்தலைவர் தயாநிதி, மண்டல செயலாளர் மணிமாறன், மாவட்ட தலைமையிட செயலாளர் ஆனந்தன், மாவட்ட பிரசார செயலாளர் முனியப்பன், மாவட்ட சட்டச் செயலாளர் லோகநாதன், மாவட்ட இணைச்செயலாளர் மாதையன், நகரச் செயலாளர் தாமோதரன் உள்ளிட்டோர்

உடனிருந்தனர்.