Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தர்மபுரி மாவட்டத்தில் 97 டிகிரி வெயில் பதிவு

தர்மபுரி, ஜூலை 14: தமிழகம் முழுவதும் 4 நாட்களுக்கு வெயில் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கோடை காலம் போல் வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த ஒரு மாதமாக 90 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் நிலவி வந்த வெயில், கடந்த 3 நாட்களாக 95 டிகிரியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று, 97.1 டிகிரியாக அதிகரித்தது. நேற்று பகல் நேரத்தில் வெப்பகாற்று வீசியது. ஆடி மாதம் துவங்க 2 நாட்களே உள்ள நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் கோடை போல் வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.