அரூர், மே 14: அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை கால்நடைகள் சந்தை நடைபெற்று வருகிறது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சி மாடு, நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், கால்நடைகளை வாங்க வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடுகள் ரூ.5,000 முதல் ரூ.29,000 வரையும், ஆடுகள் ரூ.5,000 முதல் ரூ.9,700 வரை விற்பனை செய்யப்பட்டது.


