தர்மபுரி, மே 14: தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரை வீரமாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர், கேட்டரிங் நிறுவனம் ஒன்றில் சமையலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாதனா (21). பி.காம்., பட்டதாரி. காதல் திருமணம் செய்த இருவரும், தர்மபுரி செட்டிக்கரையில் வசித்து வந்தனர். இந்நிலையில், சாதனா கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற நிலையில், பின்னர் வீடு திரும்பவில்ைல. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், தர்மபுரி டவுன் போலீசில் கார்த்திக் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிறுமி திடீர் மாயம்: தர்மபுரி அருகே அதியமான்கோட்டை தடங்கம் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகள் சினேகா(17). இவர், 9ம் வகுப்பு வரை படித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தார். கடந்த 8ம் தேதி வெளியே சென்ற சினேகா பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால், திடுக்கிட்ட பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், சினேகா கிடைக்காததால், அவரது தாய் துளசி அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.
