Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மேற்கூரை சிதிலமடைந்து காணப்படும் கார் பார்க்கிங்

பென்னாகரம், ஜூலை 13: ஒகேனக்கல் பேருந்து நிலையம் அருகே மேற்கூரை பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படும் கார் பார்க்கிங் பகுதியை சீரமைக்க வேண்டும் என, சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு, வெளிமாநிலம், மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் கார், வேன், பஸ் மற்றும் டூவீலர் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வருகின்றனர். அவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வரும் வாகனங்களை நிறுத்தும் வகையில், கடந்த 2012ம் ஆண்டு கார் பார்க்கிங் பகுதி ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த பகுதி முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் வாகனங்களை நிறுத்தும் போது கார் பார்க்கிங் மேற்கூரை சேதமடைந்து, வாகனங்களில் மீது கான்கிரீட் விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இந்த பகுதியில் முறையாக தெருவிளக்குகள் அமைக்கப்படாததால், இரவு நேரங்களில் இருளில் மூழ்கிய காணப்படுகிறது. இதனால் பல சமூக விரோத செயல்கள் ஈடுபடுவதுடன், குடிமகன்கள் ஆங்காங்கே மது போதையில் உட்கார்ந்து, அவ்வழியாக வருபவர்களை அச்சுறுத்தி வருகின்றனர். இந்த கார் பார்க்கிங் பகுதி மாறி வருகிறது. எனவே, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கலில் உள்ள கார் பார்க்கிங் பகுதியை சீரமைத்து, தெருவிளக்கு உள்ளிட்ட வசதியை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.