Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தர்மபுரி, மே 12: பென்னாகரம் அரசு கலைக்கல்லூரியில், மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை கல்லூரிக் கல்வி ஆணையர் உத்தரவின்பேரில், 2026-2027ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கை பெற விரும்பும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இணைய தள முகவரியில் பென்னாகரம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி குறியீட்டு எண்ணை(1031016) பயன்படுத்தி வரும் 29ம் தேதி வரை சேர்க்கை விண்ணப்பம் பதிவேற்றம் செய்யலாம். இக்கல்லூரியில் பிஏ தமிழ், ஆங்கிலம், பி.காம் வணிகவியல், பி.எஸ்சி கணிதவியல், கணினி அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர்க்கை நடைபெறுகிறது.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்கள், கல்லூரியில் செயல்படும் உதவி மையம் மூலம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரிடையாக வந்து விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இக்கல்லூரி மூலம் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம்(2), மின்னஞ்சல் முகவரி உடன் வருமாறு தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்ப கட்டணம் ரூ.48 மற்றும் பதிவு கட்டணம் ரூ.2 ஆகும். எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. இவ்வாறு அதில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.