பென்னாகரம், ஜூன் 11: பென்னாகரம் அருகே ஒகேனக்கல் அரசு பள்ளி மாணவர்களுக்கு மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மழைக்காலம் தொடங்க உள்ளதால், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கும் வகையில், மலேரியா நோய் தடுப்பு நடவடிக்கைகள், நோய் தொற்று பரவும் முறைகள், மலேரியா காய்ச்சல் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மண்டல பூச்சியியல் வல்லுநர் சிவக்குமார், மருத்துவ அலுவலர் மதுமிதா, இளநிலை பூச்சியியல் வல்லுநர் செல்வம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ், ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், மனோஜ், குமார், பள்ளி ஆசிரியர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு மலேரியா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் மாணவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement
