Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை துவக்கம்

தர்மபுரி, ஜூன் 11: சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய், இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, நேற்று தர்மபுரி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் தங்கள் பணியை தொடங்கினர். மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அதற்காக வழங்கப்பட்ட பிரேத்தியமான ஜீப்பில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். பள்ளிகூடம், பஸ் நிலையங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். முன்னதாக எஸ்பி மகேஸ்வரன், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி, அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து எஸ்பி மகேஸ்வரன் கூறுகையில், `தர்மபுரி மாவட்டத்தில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ தனது பணியை தொடங்கியது. பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவசர காலங்களில் உடனடி உதவி வழங்குதல் மற்றும் பேருந்து நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை இப்படை மேற்கொள்ளும்.ங என்றார்.