Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வத்தல்மலையை பழங்குடியினர் வாழும் பகுதியாக அறிவிக்க வேண்டும்

தர்மபுரி, ஆக.10: வத்தல்மலையை பழங்குடியினர் வாழும் பகுதியாக அறிவிக்க வேண்டும் என பழங்குடி மக்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்திய பழங்குடி மக்கள் சங்கம் சார்பில், கொட்டலாங்காட்டில் சங்க கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். பெரியூர் லட்சுமணன், ராஜமாணிக்கம், தனக்கோட்டி, பபூபால், தங்கராஜ், அழகுதுரை, துரை, கொட்டலாங்காடு ராமசாமி, கோவிந்தன் முன்னிலை வகித்தனர். இலளிகம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பிரதாபன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்,கூட்டத்தில், வத்தல்மையில் 100 சதவீதம், மலையாளி பழங்குடி மக்கள் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருவதால், இந்திய அரசியல் சட்டம் அட்டவணை 5ல் சேர்த்து பழங்குடியினர் வாழும் பகுதியாக அறிவிக்க வேண்டும்.